குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு! மஹிந்த எடுத்துள்ள தீர்மானம்
குருநாகல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துள்ள சூழலில் கொரோனா மரண விகிதங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், எமது மாவட்டத்தில் ஐந்து நேர ஜூம்-அத் தொழுகையையும் மற்றும் வெள்ளிக்கிழமை ஜூம்-ஆத் தொழுகையையும் தனித்தனியாக தங்களது மார்க்கக் கடமைகளில் ஈடுபடுமாறு கேட்கப்பட்டுள்ளது.
குருநாகல் போதனா வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை, குருநாகல் மாவட்ட வைத்திய சாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்று நோயாளர் பிரிவுகளிலுள்ள வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம். என். எம். சானாஸ் மற்றும் மாவட்ட செயலகத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரி மௌலவி டி. எம். இஹ்சான் மரைக்கார் ஆகியோர்களது ஆலோசனையின்படி,
ஐந்து நேர ஜமாஅத் தொழுகையையும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையையும் நிலைமை சீராகும் வரையில் கூட்டாகவின்றி தனித் தனியாக தங்களது மார்க்கக் கடமைகளை பள்ளிவாசல்களில் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் மிகவும் மோசமான நிலையில் கொரோனா மரண விகிதங்களும் கூடிக் கொண்டு இருக்கும் நிலைமையில்
முக்கியமாக இந்த மரண விகிதத்தில் முஸ்லிம்களுடைய விகிதாசாரம் வருத்தப்படக் கூடியளவுக்கும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவுக்கும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் அதிகமான பாதிப்புக்களுக்கு முஸ்லிம்கள் உள்ளாவதைத் தவிர்ப்பதன் நோக்கத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன்
இது சம்பந்தமாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் அன்வர் அலி அவர்களது ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளது.