ரஷ்யாவை தனிமைப்படுத்த கனடா விதித்துள்ள மற்றுமொரு தடை
russia
canada
isolate
Justin Trudeau
imposed
By Sumithiran
உக்ரைன் மீதான போர் தீவிரம் பெற்றுள்ள நிலையில் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையில் கனடா அரசு மற்றுமொரு தடையை விதித்துள்ளது.
இதன்படி ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ (Justin Trudeau)அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் அடையக் கூடும் என்றும் அதனால் ரஷ்யா பலன் அடையும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இந்த எண்ணெய் இறக்குமதிக்கு கனடா விதித்துள்ளது.
ஏற்கனவே தனது வான் பரப்பை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த கனடா தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
