குற்றம் நிரூபிக்கப்பட்டால் இம்ரான் கானுக்கு தண்டனை உறுதி
அரச ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு குற்றச்சாட்டுகள் நிருபணமானால் 10 முதல் 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சட்டங்களின்படி உயர் பதவியில் உள்ளவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோர் வழங்கும் பரிசு பொருட்களை, 'தோஷகானா' எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும், அவ்வாறு ஒப்படைத்த சில பொருட்களை, இம்ரான் கான் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளியே விற்றதாக புகார் எழுப்பப்பட்டது.
அதன்படி, இந்த ஊழல் வழக்கில், இம்ரான் கானுக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தது தீர்ப்பளித்ததைத் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்ற காவலில்
பின்னர் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டபோது, அதற்கு பதிலாக அரசு ஆவணங்களை அவர் கசியவிட்டதாக கூறி மீண்டும் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
குறித்த பதியப்பட்ட வழக்கிற்கமைய இம்ரான் கான் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 27ம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளது.

அதன்படி, குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் இம்ரான் கானுக்கு 10 முதல் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஷா மஹ்மூத் குரேஷியும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.