இம்ரான் கான் கொல்லப்பட்டாரா...! அதிரும் பாகிஸ்தான் - வெடிக்கும் போராட்டம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அதரவாக போராட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்த பிறகும் கூட அங்குக் குழப்பம் தீரவில்லை.
ஆதரவாளர்கள்இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் மிகப் பெரிய ஒரு போராட்டத்தை நடத்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தை முறியடிக்கும் வகையில், ராவல்பிண்டியில் மக்கள் கூடுவதைத் தடை செய்ய 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம்இதனால் அங்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடும் கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள், கூர்மையான பொருட்கள் அல்லது வன்முறைக்குத் தூண்டும் எந்தப் பொருளையும் கொண்டு செல்வ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், "ராவல்பிண்டி எல்லைகளுக்குள் ஒரு அச்சுறுத்தல் நிலவுகின்றது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு, அமைதி மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

