ஈரான் விவகாரத்தில் ட்ரம்பைக் கட்டுப்படுத்தல் : செனட் சபையில் பிரேரணை தோல்வி
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தன்னிச்சையாகத் தொடர்வதை கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதற்கு நாடாளுமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த தீர்மானத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
செனட் சபையின் நிராகரிப்பு
இந்த முடிவின் மூலம், ஈரானுக்கு எதிரான அடுத்தகட்டத் தாக்குதல்கள் அல்லது இராணுவ நகர்வுகளை மேற்கொள்வதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நாடாளுமன்றம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செனட் சபையின் இந்த நிராகரிப்பு, தற்போதைய பதற்றமான சூழலில் இராணுவ ரீதியான முடிவுகளை எடுப்பதில் வெள்ளை மாளிகைக்கு முழுமையான அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக, ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவத் திட்டங்கள் எந்தவித சட்டச் சிக்கல்களுமின்றித் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பின் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஈரானில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |