இம்ரான் கானுக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஆடம்பர அரசு பரிசுகளை குறைந்த விலையில் வாங்கியதில் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சமீபத்திய தண்டனையால், ஓகஸ்ட் 2023 முதல் சிறையில் இருக்கும் கானுக்கு தொடர்ச்சியான சட்ட சிக்கல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேலும் தற்போது ஒரு தனி நில ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
2022 ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து, ஊழல் முதல் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அரசு இரகசியக் குற்றச்சாட்டுகள் வரை பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக பாகிஸ்தானின் தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஊழல் எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் மேலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் பெடரல் புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பில் இருந்து கானின் சிறைத்தண்டனை, நில மோசடி வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |