மக்களுக்கு இராணுவ பாணியில் தண்டனை!! ஸ்ரீலங்காவில் சர்வாதிகாரத்தின் உச்சமா? இம்ரான் எம்.பி சாடல்

people lockdown army imram mp
By Vanan Jun 20, 2021 04:56 AM GMT
Report

ஏறாவூர் பொதுமக்கள் வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போவதை எடுத்துக்காட்டுகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(20) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏறாவூரில் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவற்காக வீதிக்கு வந்த சில பொதுமக்கள் பாகாப்புக்கடமையில் இருந்தவர்களால் வீதியில் இருகைகளையும் உயர்த்தி முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த நாடு ஜனநாயக நாடு. சட்டவாட்சி அமுலில் உள்ள நாடு. எனவே, எல்லாவற்றையும் சட்டரீதியாகவே அணுக வேண்டும். அதுவும் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அரசியலமைப்பு வாசகத்துக்கமைய எல்லோருக்கும் சட்டம் அமுல்படுத்த வேண்டும். சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப் படக்கூடாது என்பதையே இந்த வாசகம் எடுத்துக்காட்டுகின்றது.

ஏறாவூர் சம்பவம் சட்டத்துக்கு புறம்பானது. மனிதாபிமானமற்றது. ஒவ்வொருவருக்கும் சுய கௌரவம் உள்ளது. வீதியில் முட்டுக்காலில் நிற்க வைக்கப்பட்ட இச்சம்பவம் அவர்களது சுயகௌரவத்தை கொச்சைப்படுத்துகின்றது.

பயணத்தடை அமுலில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாடு முழுவதும் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் நடமாடுகின்றன. அதேபோல பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வீதிகளில் பயணிப்பதை நாம் காண்கிறோம். இந்நிலையில் ஏறாவூரில் தமது அன்றாடத் தேவையை நிறைவேற்ற வந்த பொதுமக்களை மட்டும் வதைக்கின்ற செயல் நாட்டில் நியாயமான சட்டவாட்சி இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சட்டம் பொதுவாக எல்லோருக்கும் தான் அமுல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த நாட்டில் சட்டம் பாரபட்சமாக அமுல்படுத்தப்படுவதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்பு மிகத் தெளிவாக செயற்படுகின்ற நிலையில் சட்டத்தை தமது கையில் எடுத்து தண்டனை வழங்கும் அதிகாரத்தை இந்த அரசு காவல் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கியுள்ளமையையே இது எடுத்துக் காட்டுகின்றது.

அரசின் பக்கச்சார்பான இந்தச் சர்வாதிகாரப் போக்கு குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த அப்பாவி மக்கள் இவ்வாறு வீதியில் தண்டிக்கப்பட்ட போதும் கூட 20 முதல் அரசுக்கு புதிதாக ஆதரவு தெரிவித்து வருகின்றவர்கள் இது குறித்து மௌனம் சாதிப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

அவர்களுக்கு இந்த மக்கள் மீது உண்மையான அன்பு இருக்குமாயின் சட்டத்துக்கு பறம்பாக இந்த நடவடிக்கைகயில் ஈடுபட்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024