'தமிழின அழிப்பிற்கு நீதி கோரி' ஐரோப்பிய ஒன்றிய தலைமையத்தில் போராட்டம்
European Union
Tamils
Sri Lanka Economic Crisis
By Vanan
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இன்று முற்பகல் 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெசெல்ஸ் தலைமை பணியகத்தின் முன்னால் “உரிமைக்காக எழு” என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் அறவழிபோராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாட்டாக வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை திசைதிருப்ப அனைத்துலகம் அனுமதிக்ககூடாது என்ற கோரிக்கைகள் இந்தப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
