வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை

Piyankara Jayaratne Bribery Commission Sri Lanka Law and Order Prisons in Sri Lanka
By Jaso Sep 02, 2026 10:23 AM GMT
Report

2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தை முதலீடு செய்யுமாறு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியை வற்புறுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல், முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்தச் சிறைத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் 

நேற்று(01) மாலை 5 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரதான வாயிலுக்குள் நுழைந்ததும், கைதிகளுக்கு வழங்கப்படும் இரண்டு ஜம்பர்கள், தகரத் தட்டு, தகரக் கோப்பை மற்றும் கூடை என்பன வழங்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் ஒரு கைதியாகப் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட கைதி இலக்கம் சிறைத்தண்டனைக் காலம் முடியும் வரை பயன்படுத்தப்படவுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை | In Piyankaras Hand Are Two Jumpers A Tin Plate

 சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது ஏற்படும் கடுமையான மன உளைச்சல் காரணமாக சிறைச்சாலையில் சேர்க்கப்படும் மற்ற கைதிகளைப் போலவே பியங்கர ஜயரத்னவுக்கும் மனநல ஆலோசனை சேவை வழங்கப்பட்டதுடன், நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிறைச்சாலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் கிடைக்கும் சலுகைகள் குறித்து அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்

சாதாரண கைதியை போலவே நடத்தப்படுவார்

சாதாரண கைதியைப் போலவே காலை 6 மணிக்கு வார்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் வார்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் அமைச்சருக்கு வீட்டிலிருந்தோ அல்லது வெளித் தரப்பினரிடமிருந்தோ உணவு பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் மூன்று வேளை உணவை மட்டுமே பெற முடியும். அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் குடும்ப சந்திப்புகளின் போது சுகாதாரப் பொருட்களை மட்டுமே பெறுவதற்கு அனுமதி உண்டு.

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை | In Piyankaras Hand Are Two Jumpers A Tin Plate

 இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன இன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதுடன், அங்கு அவரது திறன்கள் மற்றும் ஆற்றல்கள் ஆராயப்பட்ட பின்னர், மேசன், தச்சு, அச்சு, பேக்கரி அல்லது சமையல் போன்ற சிறைச்சாலையில் இயங்கும் பொருத்தமான வேலைப் பிரிவொன்றுக்கு அவர் அனுப்பப்படவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026