ரஷ்யாவிலிருந்து பயிற்சிக்காக வந்த மருத்துவருக்கு பெண்ணால் ஏற்பட்ட நிலை
ரஷ்யாவில் மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் மருத்துவர் கொழும்பு பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலைக்கு பயிற்சிக்காக வந்த நிலையில் அவரின் சூட்கேஸில் இருந்த பொருட்களை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உபகரணங்கள் திருட்டு
ரஷ்யாவில் மருத்துவம் கற்கும் வைத்தியர் ஒருவர் பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் நடைமுறை பயிற்சிக்காக அங்கு சென்றிருந்த போது அவரது சூட்கேஸில் இருந்த நவீன ஐபேட், மின் ஏற்றும் சாதனம் மற்றும் ஏ.டி.எம் அட்டை என்பவற்றை திருடப்பட்டதாக மருத்துவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டதை
பண்டாரகம பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டதை உறுதிசெய்து, அங்கிருந்த பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும், குறித்த பெண் திருட்டு நடைபெற்ற தினம் கிளினிக்கிற்குச் சென்றதை உறுதிப்படுத்தியதன் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |