முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவாலயம் திறந்துவைப்பு(படங்கள்)
மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர்கள் நினைவு சுமந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப்பலகைகள் வைக்கப்பட்ட நினைவு வளாகம் நேற்று (22)திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெயர்கள் தாங்கிய நினைவு பலகை
திறப்பு நிகழ்வுவில் மாவீரர் நினைவாக பொதுச்சுடரினை முன்னாள் மாணவர்கள் போராளியும் மாவீரரின் சகோதரரும் ஏற்றிவைக்க மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட பெயர்கள் தாங்கிய நினைவு பலகைக்கான சுடரினை மாவீரரின் பெற்றோர் ஒருவர் ஏற்றிவைத்துள்ளார்.
தொடர்ந்து பெயர் பலகையினை சட்டத்தரணி வி.மணிவண்ணன் திறந்துவைக்க ஏனைய மாவீரர்களின் பெயர் பலகையினை சம்பிரதாயபூர்வாக மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.
25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் வீரச்சாவடைந்த ஆண்டுகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுடன் இது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மக்களுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |