யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் எரியூட்டி திறந்து வைப்பு
Jaffna
Jaffna Teaching Hospital
Hospitals in Sri Lanka
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட குறித்த எரியூட்டி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று (29) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
மருத்துவ கழிவுகளை அகற்ற எரியூட்டி
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் இந்து மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் எரியூட்டி அமைக்கப்பட்ட நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்