இந்திய-சீன எல்லை விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இந்திய-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில், அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை முற்றிலும் மீள பெறுவதற்கான நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் லடாக் எல்லையில் பகுதிக்குள் சீன இராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஊடுருவியதால் இருதரப்பு இராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் இரு தரப்பு நாடுகளும் படைகளை குவித்தன. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா- சீனா எல்லை விவகாரம்
இதற்கமைய, இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டதுடன் இரு தரப்பிலும் இராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இதன்படி, இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் பற்றிய 28-வது கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி நடைபெற்றது. அதில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவானது.
இந்நிலையில் தற்போது, 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில் கூட்டத்தில், அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை முற்றிலும் மீள பெறுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய இரு நாடுகளின் இடையேயான ஆழ்ந்த பார்வைகள் பரிமாறி கொள்ளப்பட்டுள்ளது.
எல்லையில் படைகள் மீள பெறல்
மேலும், அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள மீதமுள்ள விவகாரங்களில் தீர்வு காண்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் (கிழக்காசியா) தலைமையிலான குழுவின மற்றும் சீனாவில், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகத்தின் எல்லை மற்றும் பெருங்கடல் துறைக்கான இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவினர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகமும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |