வெப்பநிலையினால் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு
நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில்,அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னை பயிரில் காணப்படும் ஓலைகளில் வெள்ளை ஈயின் தாக்கம் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய், சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு மருந்து விசிறும் 20 லிட்டர் கொள்கலனின் கலந்து விசுறுவதன் மூலம் வெள்ளை ஈயின் தாகத்தை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை ஈயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு உதவி தேவைப்படுபவர்கள் விவசாய திணைக்களத்தினை தொடர்பு கொண்டு மருந்து விசிறுவதன் ஊடாக நோயினை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |