அதிகரிக்கும் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை
இந்தியாவிலிருந்து (India) நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதத்தின் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 16,383 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் பிரித்தானியாவில் (United Kingdom) இருந்து 10,743 பேரும், சீனாவிலிருந்து (China) 6,832 பேரும், இத்தாலியிலிருந்து (Italy) 1470 பேரும் இலங்கைக்குப் பிரவேசித்துள்ளனர்.
சுற்றுலாத்துறை
சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முகமாக நாட்டின் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை இலங்கையின் (Sri Lanka) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (SLTPB) தலைவர் சாலக கஜபாகு (Chalaka Gajabahu) தெரிவித்துள்ளார்.
குறித்த செயலியானது முழு அளவில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |