இலங்கையில் மின்வெட்டு நேரம் மணிக்கணக்கில் அதிகரிப்பு - வெளியானது அறிவிப்பு
srilanka
tomorrow
powercut
fuel crisis
By Sumithiran
இலங்கை முழுவதும் நாளையதினம் (23) பல பிரிவுகளின் கீழ் நான்கு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை 11 வலயங்களாக பிரித்து இரண்டு கட்டங்களில் புதிய நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய A,B,C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய பகுதிகளான P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே இந்த மின்வெட்டு அதிகரிப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்