வேகமாக அதிகரிக்கும் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை!
Lemon
Sri Lanka
Economy of Sri Lanka
By Shalini Balachandran
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், ஒரு கிலோ எலுமிச்சை மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விற்பனை விலை
மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபாய் முதல் 3,200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி