பொதுமக்களுக்கு பணப்பரிசு! காவல்துறையினர் வெளியிட்ட செய்தி
Sri Lanka Police
Sri Lanka
Deshabandu Tennakoon
By Sathangani
நாட்டிலுள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் தீர்மானத்தின் பிரகாரம் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ரீ 56 ரக துப்பாக்கி குறித்து தகவல் அளிப்பவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபாய் வழங்கப்படவுள்ளது.
காவல்துறை ஊடகப்பிரிவு
அத்துடன், தானியங்கி ஆயுதங்கள் அல்லது கைத்துப்பாக்கிகளுக்கு மூன்று இலட்சம் (300,000) ரூபா வழங்கப்படும்.
ரிவோல்வருக்கு 250,000 ரூபாவும் வெகுமதியாக வழங்கப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி