13 ஐ நடைமுறைப்படுத்தினால் போராட்டம் உக்கிரமடையும் - அரசிற்கு எச்சரிக்கை!
13th amendment
Sri Lankan protests
Sri Lanka
Government Of Sri Lanka
By Pakirathan
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
இதனை மீறி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டால் அரசிற்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு, எல்லே குணவங்ச தேரர் எச்சரித்துள்ளார்.
மாபெரும் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கை
ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவே 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர் என்பதனை தற்போது ஆட்சியில் உள்ள மொட்டுக் கட்சியினர் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை மீறி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், நாட்டில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி