இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் கருத்து - தேரருக்கு விளக்கமறியல்
இரண்டாம் இணைப்பு
இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேரரை இன்றைய தினம் (29) கொழும்பு - கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் அநுராதபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் பதிவிட்டு வந்தமையால் இந்த தேரரை காவல்துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எதிர்ப்பு
மத நல்லிணக்கம் மற்றும் பௌத்த ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேரரின் கருத்துக்களை சிலர் ஏற்றுக் கொண்டாலும், பலர் அதற்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
