மற்றுமொரு பொருளின் விலையும் அதிகரிக்கும்?
எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு, எரிவாயு நிறுவனங்களை நடத்துவதற்காக உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்தபட்சம் ரூ .400 ஆக உயர்த்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (14) நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல மஹிந்த அமரவீர, டளஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, லசந்த அலகியவன்ன, இரண்டு எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக அமைச்சகம் மற்றும் நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டொலரின் அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலையில் பாரிய அதிகரிப்பு காரணமாக எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.