யாழ்ப்பாணம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரித்தது எரிபொருள் கொடுப்பனவு
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் கொடுப்பனவு
யாழ்ப்பாணம் உட்பட தூரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து அவர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு இரண்டு இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு காலத்துக்குக் காலம் அதிகரிக்கும்.
கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத நிலை காணப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை
இதனைக் கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்போது எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வரையான எரிபொருள் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
