நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!
நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர (Priyamali Jayasekara) தெரிவித்துள்ளார்.
ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வயல்கள் மற்றும் நீர்த் தேங்கி நிற்கும் இடங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் எலிகள் அதிகளவில் நடமாடும் இடங்களில் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு மருந்து
இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்திய நிபுணர் பேராசிரியர் பிரியமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் (Jaffna) எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |