சதொசவில் அதிகரித்த சீனி விலை : நுகர்வோர் குற்றச்சாட்டு
Lanka Sathosa
Consumer Protection
By Sumithiran
லங்கா சதொசவில் கிலோ ஒன்று 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்க நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு குறைந்த விலையில் சீனி வழங்குவதாக கூறி சுமார் இரண்டு வாரங்களாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்தது.
சாதாரண சந்தையில்
சாதாரண சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 290 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், அரச நிறுவனமான சதொச, சாதாரண சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்