அதிகரிக்கிறது மின் கட்டணம் -மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி
srilanka
people
increase
electricity bill
By Sumithiran
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (16) மின்வலு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி