சரிவில் இருந்து உயர்த்திய அக்சரின் அரைசதம் - இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 262 ஓட்டங்களை பெற்றது.
குறித்த போட்டியில் ஒரு ஓட்டம் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா அணி தனது 2வது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் மாத்திரம் அரைசதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். ஏனைய வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புக்களையும் சந்தித்தது.
இந்திய அணி முன்னிலை

தற்போது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 61 ஓட்டங்களுக்கு ஒரு ஆட்டமிழப்பை சந்தித்துள்ளது.
இந்தியா - அவுஸ்திரேலிய இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட்டில் நாணயசுழட்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் மற்றும் நடுவரிசை வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவர் மாத்திரமே அணி சார்பில் அரைசதம் கடந்தனர்.

உஸ்மான் கவாஜா 81 ஓட்டங்களையும் , ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ஓட்டங்களையும் பெற்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது.