73 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை - 317 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி
புதிய இணைப்பு
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
391 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக,நுவனிந்து பெர்னாண்டோ 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 19க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் மொஹம்மட் சிராஜ் 32 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், மொஹம்மட் சமி 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதற்கமைய, இந்திய அணி இந்தத் தொடரை 3 - 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

முதலாம் இணைப்பு
இந்தியா – இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கேரள திருவணந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழட்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி முதல் ஆட்டமிழப்புக்காக 95 ஓட்டங்களை சேர்த்தனர்.
கருணாரத்ன வீசிய பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க அதன் பின் இனைந்து இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
391 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி

குறித்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் கடந்தனர்.
குறித்த போட்டியில் சுப்மன் கில் 97 பந்துகளை எதிர்கொண்டு 116 ஓட்டங்களும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 110 பந்துகளை எதிர்கொண்டு 166 ஓட்டங்களையும் பெற்றனர். 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 5 ஆட்டமிழப்புக்கு 390 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
391 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 20 மணி நேரம் முன்