சுதந்திர தின விழாவுக்கு தயாராகும் அநுர அரசாங்கம்!
இவ்வாண்டு தேசிய சுதந்திர விழாவை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டு 78 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
அரசாங்கம்
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போதைய அரசாங்கம் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கி ஆட்சியமைத்து வருகிறது.

தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையில் முறையாக நிறைவேற்றப்படவில்லை என அரசாங்கம் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் கூட மக்கள் மத்தியில் தற்போதைய அரசாங்கம் மீது வரவேற்புகள் உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மிகக் குறைந்த செலவில் நடத்தப்பட்டதாகவும், இவ்வாண்டு அதனை திட்டமிட்டு முறையாக நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாகவும் ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
YOU MAY LIKE THIS....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |