இன்று கூடும் நாடாளுமன்றம் - அஸ்வெசும தொடர்பில் விவாதம்
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இவ்விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வார நடவடிக்கைகளுக்காக இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
பிரேரணை
'திட்வா' புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இன்மை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வியாழக்கிழமை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |