கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி -இந்தியாவிலிருந்து தப்பியோடும் செல்வந்தர்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்துள்ள பின்னணியில், அந்த நாட்டிலுள்ள செல்வந்தர்கள் தமது குடும்பத்தாருடன், தனி விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவிவரும் ஒக்சிஜன் தட்டுப்பாடு, கட்டில் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், பாரிய நிதியை செலவிட்டு, அந்த நாட்டு செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி, இவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொலிவூட் நடிகர்களும் தனி விமானங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன், 2500ற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.