அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டம்! கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சி
இந்தியாவின் (India) அதானி நிறுவனத்தால் மன்னாரில் (Mannar) முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் பாரிய பண மோசடி இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து பாரிய பண மோடியில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காற்றாலை திட்டம்
இதன்படி, இலங்கையிலுள்ள வேறு எந்த தரப்பினரதும் யோசனைகளை கருத்தில் கொள்ளாது, மன்னாரில் காற்றாலை திட்டத்தை முன்னெடுப்பதற்கு அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் இலங்கை மில்லியன் கணக்கான டொலர்களை இழக்க நேரிடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதானி நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக பாரிய இழப்புக்களை எதிர்நோக்க நேரிடுமென அஜித் பி. பெரேரா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |