டெஸ்ட் தொடரில் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த இந்திய அணி
நியூஸிலாந்துக்கெதிரான(new zealand) முதலாவது டெஸ்ட் தொடரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி(india cricket team) 46 ஓட்டங்களுக்கு அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்து சொந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே இந்திய அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
ஐந்து பேர் டக் அவுட்
முதல் ஏழு இந்திய துடுப்பாட்டவீரர்களில் ஐந்து பேர் டக் அவுட் ஆகி வெளியேறியமை இதுவே முதல் முறை.
இந்தியா எடுத்த 46 ஓட்டங்கள் என்பது இப்போது ஆசியாவின் மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
2020-21 அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்டில் இந்தியா 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.இது அவர்களின் மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
இந்திய அணி மோசமான சாதனை
1986ல் பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் எடுத்த 53 ஓட்டங்களையும், பின்னர் 2002 இல் ஷார்ஜாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த 53 ஐயும் தாண்டி இந்திய அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.
இது இந்தியாவின் மூன்றாவது மோசமான டெஸ்ட் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
இந்தியா குறைந்த ஓட்ட எண்ணிக்கை
36 அவுஸ்திரேலியா அடிலெய்ட் , 2020 42 இங்கிலாந்து லோட்ஸ், 1974 46 நியூஸிலாந்து பெங்களூர், 2024* 58அவுஸ்திரேலியா பிரிஸ்பேன், 1947 58 இங்கிலாந்து மான்செஸ்டர், 1952
சொந்த மைதானத்தில் இந்தியாவின் குறைந்த ஓட்ட எண்ணிக்கை
46 நியூஸிலாந்து பெங்களூர், 2024 75மேற்கிந்தியத்தீவுகள் டெல்லி, 1987 76தென்னாபிரிக்கா அகமதாபாத், 2008 83 இங்கிலாந்து சென்னை 1977 83நியூஸிலாந்து மொகாலி, 1999
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
