விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்கள்- இந்திய புலனாய்வாளர்களின் நடவடிக்கை!
விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்களை கடத்திய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் வளாகங்களிலேயே இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அதனடிப்படையில், இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர், சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய ஏழு இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்கள் மற்றும் பல்வேறுப்பட்ட குற்ற ஆவணங்களை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரே இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 2 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள், பல்வேறுப்பட்ட குற்ற ஆவணங்கள், சிம் அட்டைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட ஏழு டிஜிட்டல் சாதனங்களை புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.