வவுனியாவில் 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: kapil
வவுனியாவில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கனகராயன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் நேற்று (27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி