நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல்சேவை : ஒருவருடத்திற்கான செலவை ஏற்கும் இந்தியா
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே பயணிகள் படகுச் சேவைக்காக ஒரு வருட காலத்திற்குரிய வரிகள் மற்றும் பிற கட்டணங்களுக்கான செலவை ஒரு மாதத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஏற்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஷிப்பிங் கோப்பரேஷன் ஒப் இந்தியா (SCI) மூலம் ஒக்டோபர் 2023 இல் தொடங்கப்பட்ட பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மே 13, 2024 அன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
தனியார் நிறுவன படகுச்சேவை
இது ஷிப்பிங் கோப்பரேஷன் ஒப் இந்தியா (SCI) வால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவன(IndSri) படகுச்சேவை மூலம் இயக்கப்படும்.
இந்தச் சேவையை மலிவு விலையிலும், பயணிகளுக்குக் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுவதற்காக, இந்திய அரசாங்கம் பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவை ஒரு வருடத்திற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஏற்க முடிவு செய்துள்ளது.
இலங்கையிலிருந்து கப்பல் மூலம் புறப்படும் பயணிகளிடமிருந்து
அதேபோன்று, இலங்கையிலிருந்து கப்பல் மூலம் புறப்படும் பயணிகளிடமிருந்து தற்போது அறவிடப்படும் விலகல் வரியை இலங்கை அரசாங்கம் (GOSL) குறைத்துள்ளது.
காங்கேசன் துறைமுகத்தை புனரமைப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானிய உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |