ஜி 20 உச்சி மாநாட்டில் ‘பாரத் ஆக மாறிய இந்தியா’- பரபரப்பை ஏற்படுத்திய பெயர்பலகை
BJP
Narendra Modi
India
By Sumithiran
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக முயன்று வருகிறது
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதேவேளை சிலர் ஆதரவாக கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன்
இந்த நிலையில் இன்று டில்லியில் ஜி 20 உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பெயர் பலகையை பார்த்த வலைத்தளவாசிகள் இந்தியா, பாரத் என பெயர் மாற்றப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்