ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் இந்தியா - ராமதாஸ் கடும் கண்டனம்

srilanka india army Ramadas
By Jaso Oct 15, 2021 09:59 PM GMT
Report

இனப் படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சிகளையும், உதவிகளையும் இந்தியா அளிப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகும் என பா.ம.க நிறுவுனர் ராமதாஸ்(Ramadas) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று(ஒக்டோபர் 15), ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், சிங்கள இராணுவத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் பயிற்சியளிக்கத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

இலங்கைக்கு நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே, அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்புகளின்போது இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும், அதன் ஒரு கட்டமாக, இந்தியாவில் ஆண்டுக்கு 1000 சிங்கள வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமன்றி, கூடுதலாக 50 இராணுவ அதிகாரிகளுக்குச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

இது ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். உலக மயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சூழலில், உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால், ஒரு நாடு அதற்கு வழங்கப்பட்ட உதவியைத் தவறாகப் பயன்படுத்தும் என்று தெரிந்தால், அந்த நாட்டுக்கு உதவாமல் இருப்பதுதான் அறம். அவ்வாறு இராணுவரீதியாக உதவக்கூடாத நாடுகள் பட்டியலில் மிகவும் முக்கியமானது இலங்கை ஆகும். இலங்கைக்கு மருத்துவ ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் உதவிகளைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்களப் படையினருக்கு உதவிகள் அளிக்கப்பட்டால், அது மீண்டும், மீண்டும் ஈழத் தமிழர்களைக் கொல்லவும், ஒடுக்கவும் மட்டும்தான் பயன்படும். இலங்கையில் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாத சிங்களப் படைகள் அப்பாவித் தமிழர்களை இனப் படுகொலை செய்தன. சிங்களப் படையினர் போர்க்குற்றங்களை இழைத்தது உண்மை என்பதை விசாரணை மூலம் உறுதி செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை இப்போது திரட்டி வருகிறது.

இதுவரை 1.20 இலட்சத்துக்கும் கூடுதலான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியிருக்கிறது. இலங்கைப் போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆகியும் அங்கு மனித உரிமை மீறல் தொடருவதாகவும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது. இன்றளவிலும் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நீடிக்கின்றன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்தியவர்களின் கைகளில்தான் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு உள்ளது.

இலங்கை இறுதிப் போரின்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சதான் இப்போது பிரதமர்; அப்போது பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சதான் இப்போது அதிபர்; இலங்கை இறுதிப் போரில் 58ஆவது படையணியின் தளபதியாக இருந்து அப்பாவி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சவேந்திர சில்வாதான் இப்போது இலங்கையின் போர்ப்படைத் தளபதியாக இருக்கிறார். அவர் செய்த கொடிய குற்றங்களுக்காக அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இத்தகைய பின்னணி கொண்டவர்களால் இயக்கப்படும் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சியும், உதவிகளும் வழங்கும்போது அவை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியா வழங்கும் இராணுவ உதவிகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிலவுகிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே, போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்திய சிங்களப் படையினருடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், அந்த நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, இலங்கையில் போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்; அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026