யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் அமர்வுக்கு முதல்முறையாக தலைமை தாங்கும் இந்தியா!
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கவுள்ளதாக யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டில் (2024) ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வு இடம்பெறவுள்ளது.
மேலும், இந்த அமர்வை இந்தியா நடத்துவதும், தலைமை தாங்குவதும் இதுவே முதல் முறை ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதித் தீர்மானம்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு அமர்வு ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும், மேலும், உலக பாரம்பரிய மாநாட்டை செயற்படுத்துவது இந்த குழுவின் பொறுப்பாகும்.
இந்த மாநாடு உலக பாரம்பரிய நிதியின் பயன்பாட்டை வரையறுத்து மாகாணக் கட்சிகளுக்கு அவர்களின் கோரிக்கையின் பேரில் நிதி உதவியை வழங்கிட வழிவகுக்கும்.
India to chair & host UNESCO's World Heritage Committee for the 1st time from 21st to 31st July 2024 in New Delhi: Permanent Representative of India to UNESCO, Vishal V Sharma pic.twitter.com/IhJo2lJIuC
— ANI (@ANI) January 9, 2024
மேலும், அபாயகரமான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இருந்து சொத்துகளைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவுகள் குறித்தும், உலகப் பாரம்பரியப் பட்டியலில் புதிய சின்னம் சேர்க்கப்படுமா என்பது குறித்தும் இறுதிக் கருத்தை இந்த ஆணையம் வெளியிடும்.
தவிரவும் உலக பாரம்பரியக் குழுவானது 21 மாநிலக் கட்சிகளைக் கொண்டுள்ளது, ஆறு வருடத்திற்கு ஒரு முறை பொது தேர்தல் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
உலக பாரம்பரியக் குழு
இருப்பினும், பெரும்பாலான மாநிலக் கட்சிகள் தானாக முன்வந்து நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே குழுவின் உறுப்பினர்களாக இருக்க, மற்ற மாநிலக் கட்சிகள் குழுவில் இருக்க வாய்ப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போதைய உலக பாரம்பரியக் குழுவில் 21 மாநிலக் கட்சிகள் காணப்படுகின்றன, அதில், அர்ஜென்டினா, பெல்ஜியம், பல்கேரியா, கிரீஸ், இந்தியா, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கஜகஸ்தான், கென்யா, லெபனான், மெக்ஸிகோ, கத்தார், தென் கொரியா, ருவாண்டா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல் , துருக்கி, உக்ரைன், வியட்நாம் மற்றும் ஜாம்பியா இருக்கின்றன.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு ஆண்டுதோறும் 7 மாநிலக் கட்சிப் பணியகத்தைத் தேர்ந்தெடுக்கிறது, இது குழுவின் பணியை ஒருங்கிணைக்க, கூட்டம் நடைபெறும் திகதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயிக்க உதவுகிறது.
யுனெஸ்கோவின் இந்த அமைப்புக்கு ஒரு தலைவர், ஐந்து துணைத் தலைவர்கள் மற்றும் ஒரு அறிக்கையாளர் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள 46 வது அமர்விற்கு, பணியகத்தின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெல்ஜியம் அறிக்கையாளராகவும், பல்கேரியா, கிரீஸ், கென்யா, கத்தார், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய 5 மாநிலக் கட்சிகள் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |