அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தீவிரமான தூதரகப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தடையின்றி நடைபெற்றதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ள அவர், கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
அதன்போது, உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரம் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகியவை முதன்மையாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
دیپلماسی برای ما ادامه جهاد مقدس مدافعان ایران زمین است. تجربه بدعهدیها و بدسگالیهای آمریکا را فراموش نکرده و نمیکنیم. همانطور که جنایات شنیع ارتکابی آنها و رژیم صهیونیستی در جریان جنگهای تحمیلی دوم و سوم را نخواهیم بخشید.
— Esmaeil Baqaei (@IRIMFA_SPOX) April 12, 2026
امروز روز پر کار و طولانی برای هیات نمایندگی جمهوری…
இது தவிர ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்குவது, போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்குவது மற்றும் ஈரான் உள்ளிட்ட ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்து இரு தரப்பும் விரிவாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதி முடிவு
இதன்படி, இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதி முடிவு என்பது முழுமையாக எதிர்தரப்பின் கைகளிலேயே இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பாகேய், அமெரிக்கா இந்த விவகாரத்தில் எவ்வளவு நேர்மையாகவும் நற்பண்புடனும் செயல்படுகிறது என்பதில் தான் அனைத்தும் அடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Image Credit: 1Lurer
குறிப்பாக சர்வதேசச் சட்டங்களுக்குப் புறம்பான கோரிக்கைகளையும் அளவுக்கு அதிகமான நிபந்தனைகளையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் ஈரானின் முறையான உரிமைகளையும் தேசிய நலன்களையும் அங்கீகரிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |