குவியும் சடலங்கள்! இந்தியத் தலைநகரில் விறகுத் தட்டுப்பாடு
covid
death
today india
By Vanan
இந்தியத் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் மரணமடையும் மக்களது சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விறகுகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு டெல்லிநகர முதல்வர் ஜெய்பிரகாஷ் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதனையடுத்து டெல்லிக்கு அருகில் உள்ள வனங்களில் இருந்து அவசரகால ரீதியில் விறகுகள் வெட்டப்பட்டுவருவதாக அறிவிக்கபட்டுள்ளது.
டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு உடலங்கள் எரியூட்டப்பட்டுவரும் நிலையில் 24 மணிநேரமும் உடலங்கள் குவிவது வேதனையும் அவலமும் நிறைந்தகாட்சிகளாக பதிவாகியுள்ளன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்