கொரோனாவோடு போராடும் இந்தியர்கள் - பிரதமர் மோடியின் விசேட அறிவிப்பு
இந்தியாவில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அறிவித்துள்ளார்.
உள்ளுர் நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர், கொரோனாவின் இரண்டாவது அலையோடு இந்தியா போராடிக் கொண்டிருப்பதாக கவலை தெரிவித்ததுடன், இந்தியாவில் இதுவரை 23 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்திய விஞ்ஞானிகள் விரைவில் ஒரு புதிய கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறிய அவர், இந்தியாவில் ஏழு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசே மீண்டும் கொரோனா தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் மாநிலங்களுக்கு விநியோகிக்கும் எனவும்,
இந்தியாவில் நம்ப முடியாத அளவில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் தற்போது பத்து மடங்கு அளவுக்கு ஒட்சிசன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.