யாழ் - இந்திய புதிய துணை உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பு
jaffna INDIA DEPUTY HIGH COMMISSIONER
By Vanan
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய துணை உயர்ஸ்தானிகராக ராகேஸ் நடராஜ் இன்று தனது அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை உயர்ஸ்தானிகராக இதுவரை கடமையாற்றிய பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்திய உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய துணை உயர்ஸ்தானிகராக இந்திய வெளிவிவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
இதன்படி இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி