சிறிலங்காவுக்கு டோர்னியர்! இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ரணில்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Government Of India Sri Lanka Navy Sri Lanka Air Force
By Vanan Aug 15, 2022 01:55 PM GMT
Report

டோர்னியர் - 228 ரக விமானம் இந்தியாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் எதிர்காலத்திலும் சிறிலங்கா இணைந்து பயணிக்குமென டோர்னியர் -228 ரக  விமானத்தை சிறிலங்கா விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இந்தியா - சிறிலங்கா உறவு

சிறிலங்காவுக்கு டோர்னியர்! இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ரணில் | India Dornier 228 Aircraft Received Srilanka Ranil

''இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இருப்பது பொதுவான குணாம்சங்கள். இரு தரப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். எனவே இரு நாடுகளுக்கும் தனியான பயணம் இல்லை.

வரலாறு இந்தியாவையும் சிறிலங்காவையும் ஒன்று சேர்த்திருப்பதால் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும்.

பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம்

சிறிலங்காவுக்கு டோர்னியர்! இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ரணில் | India Dornier 228 Aircraft Received Srilanka Ranil

இந்திய - சிறிலங்கா உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக நாம் செயற்பட்டு வருகிறோம்.

இராமாயணத்தைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதோடு ஒரு சில சிறிய வேறுபாடுகள் மாத்திரமே உள்ளன” என்றார்.

தொடர்புடைய செய்தி 

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம்

YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்