இந்திய மக்களவை தேர்தல்: சற்று முன்னர் நிலவரம்
உலகின் ஜனநாயக திருவிழா என வர்ணிக்கப்டும் இந்திய தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மதியம் 02 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 இடங்களிலும், இண்டியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஏனைய கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை.
441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில்
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)