விண்ணை தொடப்போகும் அண்டை நாட்டின் பொருளாதார வளர்ச்சி
மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 642.49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிப்பாகும், மேலும் இது உலகின் முக்கிய பொருளாதாரங்களில் இந்த ஆண்டுக்கான மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
இந்திய பொருளாதாரம்
மார்ச் 15ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 6.4 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 7.6% வளர்ச்சி அடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை
அதேவேளை, இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், தொழிலாளர்களின் பணம் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகிய இரண்டும் 2022 ஐ விட கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |