கட்டுப்படுத்தப்பட்ட இந்திய அத்துமீறல் - முல்லைத்தீவில் பிடிபட்ட பெருமளவு இறால்கள்!
Mullaitivu
Douglas Devananda
Sri Lanka
By Kalaimathy
பெருந் தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடித் தொழில் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பெருந் தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளர்.
டக்ளசிற்கு நன்றி தெரிவித்த கடற்றொழிலாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமது இடங்களுக்கு அழைத்துச் சென்று, பிடிக்கப்பட்ட இறால்களை காண்பித்த கடற்றொழிலாளர்கள், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தியமைக்காக தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் கரிசனை
இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினரை மாத்திரம் நம்பி இருக்காமல், கடற்றொழிலாளர்களும் அதுதொடர்பாக கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.









நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்