இலங்கை எல்லைக்குள் அத்துமீறிய இந்திய படகுகள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.
நீதவான் உத்தரவு

கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து 22 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 19 மணி நேரம் முன்