இந்தியாவால் பாரிய மாற்றமடைந்த சிறிலங்கா..!
சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகமாக உதவி செய்துள்ளதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உலகம் எவ்வாறு நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும், கொந்தளிப்பாகவும் மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் சிக்கலான உலகளாவிய நிலப்பரப்பை' பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
பாரிய மாற்றம்
இலங்கை, கடந்த ஆண்டு, மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது இந்தியா உதவி செய்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு செய்ததை விட இலங்கைக்கு இந்தியா பாரிய சேவைகளை செய்துள்ளது.
எவரேனும் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தால், இந்தியாவின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானிக்க முடியும் என்றும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
