அமெரிக்கா மீது இந்தியா முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு
அமெரிக்க (America) மதுபானங்களுக்கு இந்தியா (India) 150 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா (India) உள்ளிட்ட நாடுகள் அதிக வரியை விதிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அத்தோடு, தங்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு நிகர அமெரிக்காவும் அந்தந்த நாடுகளுக்கு வரி விதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
வரி விதிப்பு
இந்தநிலையில், ஏப்ரல் இரண்டாம் திகதி இந்தியா மற்றும் சீனா (China) மீதான பரஸ்பர வரி விதிப்பு அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
இதன் பிண்ணனியில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் (Caroline Leavitt) மீண்டும் வரி விதிப்பு குறித்து இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்தியாவை பாருங்கள், அமெரிக்காவின் மதுபானத்திற்கு 150 சதவீதம் வரி விதிக்கிறது.
அமெரிக்க நிறுவனம்
இது அந்நாட்டிற்கு அமெரிக்க நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு உதவுமா ? அப்படி நடக்காது என்று நினைக்கிறேன்.
விவசாய பொருட்களுக்கு 100 சதவீதம் வரியை இந்தியா விதிக்கிறது, பரஸ்பர வரி விதிப்பில் ட்ரம்பிற்கு நம்பிக்கை உள்ளது.
அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் ஜனாதிபதி தற்போது நமக்கு கிடைத்து உள்ளார்" என தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ட்ரம்பின் அறிவிப்பிற்கு பின்னர் லோக்சபாவில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லையெனவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்