ஜப்பானின் காந்தி சிலை - திறந்து வைத்த இந்திய பிரதமர்
Mujibur Rahman
Japan
By pavan
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
42 அங்குல உயரமுள்ள காந்தி சிலை
ஜி7 உச்சிமாநாடு நடைபெறும் ஹிரோஷிமா நகரில் உள்ள அமைதிப் பூங்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 42 அங்குல உயரமுள்ள காந்தி சிலையை திறந்து வைத்து வணங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும், ஜப்பான் அரசின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி